Thu. Sep 29th, 2022

பணியாளர்களை நிறுத்திய நெட்பிளிக்ஸ் அமெரிக்க நிறுவனமான அதன் பணியாளர்களை வெளியேற்றி இருக்கிறது தற்போது உள்ள சூழ்நிலையில் பார்க்கும்பொழுது மொத்தம் 150 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற செய்தி வந்துள்ளது இது எதற்காக என்று பார்க்கும்பொழுது மாத சந்தாதாரர்கள் உள்ளனர்.

அதனால் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க கடினமாக உள்ளது என்பதை காட்டி அந்நிறுவனம் தன் பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பி உள்ளது ஆக மொத்தம் இரண்டு லட்சம் சந்தாதாரர்களை ஏப்ரல் மாதம் மட்டும் இழந்துள்ளது நெட்பிளிக்ஸ் இதன் விளைவாக அந்நிறுவனம் 150 பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கியுள்ளது வரும் காலாண்டில் தன்னுடைய இரண்டு மில்லியன் பயனாளர்களை நெட்பிளிக்ஸ் இழக்கும் என்ற அபாயம் உள்ளது

   இந்த இரண்டு மில்லியன் பயனாளர்கள் வெளியே சென்றால் இன்னும் இதை விட அதிகமாக வேலையாட்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இது மட்டுமல்லாது அமெரிக்காவிலுள்ள பல மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் நடந்துகொண்டிருக்கிறது இதைப்போல் கூகுள் அமேசான் ட்விட்டர் போன்ற பெரும் நிறுவனங்கள் தன் வேலையாட்களை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

         இனிவரும் காலங்களில் ஐடி பணி செய்யும் ஊழியர்களுக்கு இதுபோல் நிறைய வேலை நெருக்கடிகள் மற்றும் வேலைக்கான ஆபத்துகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் அமெரிக்காவின் தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து வரும் நிலையில் இந்த வேலை இழப்பு அதிகமாக ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதேபோல் சென்றால் இந்த ஆபத்து அமெரிக்காவை சார்ந்து தொழில் செய்யும் இந்திய நிறுவனங்களும் சேர்ந்து பாதிக்கும்

Netflix lays off 150 mostly US-based staff | Engadget

         இந்த பாதிப்பு இந்திய வேலையாட்களையும் பாதிக்கும் இதனால் இந்தியாவில் வேலை செய்யும் அமெரிக்க நிறுவனங்களை நம்பியுள்ள கம்பெனிகளில் வேலை செய்யும் பணியாளர்கள் சற்று பொறுமையாக இருக்கவேண்டும் மற்றும் தன்னுடைய தகுதியை மென்மேலும் வளர்த்துக் கொண்டு அடுத்த கம்பெனிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் இந்த  பிரச்சனை வரும் சில ஆண்டுகளுக்கு இருக்கும் இது அமெரிக்கா இந்தியா மட்டுமல்லாது அனைத்து நாடுகளிலும் இதே பிரச்சனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

By Adhan

Leave a Reply

Your email address will not be published.